யாழ்பாண மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் விவசாய துறையும் முக்கிய பங்காற்றுகின்றது.
சுன்னாகம் ,ஊரெழு, இளவாழை,உரும்பிராய்,மருதனார்மடம்,இணுவில் என பல இடங்களிலும் திராட்சை செய்கை பிரபல்யமடைந்திருந்ததுடன் அதிகப்படியான வருமானத்தையும் பெற்றுக்கொடுத்தது.
யாழ்பாணத்தில் திராட்சை செய்கைக்கான அதிக விளைச்சளை கொடுக்ககூடிய புதிய இனம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது .ஷராட், சொனக்கா என்ற திராட்சை வகைகளே இறக்குமதி செய்யப்பட்டன.
குடாநாட்டின் உள்ளூர் உற்பத்திகள்
யாழ் விவசாய உற்பத்தி துறையில் பல குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. புகையிலை, முந்திரிகை, சின்ன வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, வாழைப் பழம் மற்றும் பணம் பொருள் உற்பத்திகள் ஏற்றுமதி தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததுடன் ஏனைய மரக்கறி மற்றும் தாணியங்கள், பழவகைகளும் உள்ளூர் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டு தன்னிறைவு கண்டிருந்தன. குடாநாட்டின் நெல் உற்பத்தியானது உள்ளூர் தேவையில் 12% பூர்த்தி செய்திருந்தது.
மேலும் உள்ளூர் தேவையில் 80% ஐ பூர்த்தி செய்ய கூடியதாக இறைச்சியும் 50% ஐ பூர்த்தி செய்யக் கூடியதாக பாலும் உற்பத்தி செய்யப்படுவதாக யாழ்மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக் கிளை தெரிவிக்கின்றது.
எனினும் 1980களில் மொத்த தேசிய கால்நடை உற்பத்தியில் 7% கோழிகளையும் 10% மாடுகளையும் 20% ஆடுகளையும் 60% செம்மறி ஆடுகளையும் யாழ்மாவட்டமே உற்பத்தி செய்ததாக புள்ளிவிபரக் கிளையின் கையேட்டில் இருந்து தெரிய வருகின்றது. எனினும் யுத்தம் இந்த நிலையை மாற்றியமைத்தது. கால்நடை வளர்ப்பு வீதம் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேபோல 1983 ல் யாழ்மாவட்டமானது இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 20% (48,677 Mt), கருவாட்டு உற்பத்தியில் 57% (5,484 Mt) என்ற அளவில் பங்களிப்பு நல்கியிருந்தது. இதனால் 24,839 பேர் நேரடியாக வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர்.
எனினும் பாதுகாப்பு காரணங்களிற்காக அரசு பல்வேறு தடைகளை மீன் பிடி தொழிலுக்கு ஏற்படுத்தியதுடன் குறிப்பாக, மீன் பிடி கடல் எல்லை, நேரம், படகின் வலு, மீனவர் எண்ணிக்கை என்பவற்றில் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள் மீன் உற்பத்தியை குடாநாட்டில் வீழ்ச்சியடைய செய்துள்ளது. 2009 ல் 2% - 3% (11,978 Mt) என்ற அளவில் வீழ்ச்சி கண்டதுடன் தற்போது மீன்பிடியில் உள்ள தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
குடாநாட்டின் கைத்தெழில் துறையை எடுத்துக் கொண்டால், இங்கு பாரிய கைத்தொழில் முயற்சிகளாக அரச முயற்சியில் அமைந்த சீமெந்து கூட்டுத்தாபனம் மட்டுமே காணப்பட்டதுடன் இதனையும் 1990 ல் அரசு மூடிவிட்டது.
நடுத்தர கைத்தொழில் முயற்சிகளாக அலுமினிய உலோக தொழிற்சாலைகள், பணிக்கட்டி தொழிற்சாலை, கடல் உணவு பதனிடும் தொழிற்சாலை, படகு கட்டுதல், கனியநார் கூரைதகடு உற்பத்தி, கண்ணாடி தொழிற்சாலை, வடிசாலை, மின்தறி, உப்பளங்கள், கால்நடை தீவின உற்பத்தி, பனம் பொருள் உற்பத்தி, சலவை கட்டி, கடதாசி, ஆடைக் கைத்தொழிற் சாலைகள் போன்றன காணப்பட்டதுடன் இவற்றில் ஒரு சில தற்போது சிறு தொழில் அல்லது குடிசைக் கைத்தெழில் முயற்ச்சி என்ற நிலையிலேயே இயங்குகின்றன.
1983 ல் யாழ்மாவட்டத்தில் 3,121 உற்பத்தி தொழிற்சாலைகள் காணப்பட்டதுடன் இவை 18,553 பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பினை வழங்கி வந்தன. எனினும் தொடர்ந்து வந்த யுத்தம் 1997 ல் 3,101 உற்பத்தி தொழிற்சாலைகள் என வீழ்ச்சி காண்டதுடன் இவற்றில் 9,879 பேருக்கே நேரடி வேலை வாய்ப்பு கிடைத்ததாக மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக் கிளை தரவுகள் காட்டுகின்றன.
இவ்வாறு படிப்படியாக வீழ்ச்சி கண்டு வந்த விவசாயம்,கால்நடை, மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறையானது இன்னும் வழமை மாறாத நிலையில், மந்தமாக நகர்வதோடு இதற்கு பல சமூக பொருளாதார காரணிகளும் தடையாக காணப்படுகின்றன.
விசேடமாக குடாநாட்டின் உற்பத்திகள் தற்போது உள்ளூர் தேவை கருதியே இடம்பெறுவதோடு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஏற்றுமதி தரத்திலான உற்பத்திகளுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதுடன் ஊக்கமளிக்க வேண்டியும் உள்ளது
No comments:
Post a Comment