Small Businesses and Entrepreneurship


அவரவர் வேலைகளை பார்த்தபடி ஒவ்வொருவரது வாழ்க்கையும் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு வேகமான கால ஓட்டமும் வாழ்க்கைமுறையும் இருக்கின்ற நிலையில் ஒருசில தொகுதியினர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி எந்தவொரு சமூகமும் அலட்டிக்கொள்ளாதிருப்பதும் பாரதூரமான விடயம் என்பதை எம் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றது. இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த சமூகத்தின் முதுகெலும்புகள் மறந்து விட்டன. எனவே இந்த தினங்களில் வட மாகாண முஸ்லிம் சோந்தங்களைப் பற்றி கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டியும் இருக்கின்றது. இல்லையேல் வடபகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா? இல்லை அப்படியொரு சமூகம் இருந்ததா? என்பதை இன்னும் ஓரிரு  தசாப்தங்கள் கடந்த பின்னர் முழு உலகமும் மறந்து விடலாம்.
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை வருடாவருடம் நினைவு கூறுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. அடுத்து வரும் வருடங்களிலும் கடந்த காலங்களை போன்று நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பதா? அல்லது அடுத்து வரும் ஒவ்வொரு கணத்திலும் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குதீர்வுகிட்ட என்ன செயலாம் என திட்டமிட்டு அதனை அமுல் நடத்துவதா? இதனை ஒவ்வொரு மனித நேயமுள்ளவரும் சிந்திக்க வேண்டியுள்ளது. 
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் ஆயுத முனையில் இன சுத்திகரிப்புக்குள்ளாகி வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன்  22 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் இரண்டரை மணி நேர காலக்கெடுக்குள்  பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றிய போது எந்தவொரு உடைமைகள், சோத்துக்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களையோ பணத்தையோ எடுத்துச் செல்ல தடை விதித்தனர்.
இதனால் அனைத்தையும் இழந்த மக்கள் வெறுங்கையுடன் புத்தளம் நோக்கி வந்தனர். புத்தளம் மாவட்ட முஸ்லிம்களும்  ஏனையோரும் அம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து தமது சொத்துக்கள் பலவற்றை அம்மக்களுக்காக அர்ப்பணித்தனர். மீளத் திரும்பிச் செல்லும்போது தமது சோந்த இடத்தில் வாழ்வதற்கான ஆளுமையையும் அங்குள்ள சமூகத்தை புரிந்து வாழ்வதற்கான பொறுமை, தைரியம் என்பவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 ஸ்திரமற்ற சமூக, பொருளாதார, உளவியல் நிலைக்கு மத்தியில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் நான் யார்? எனது நிலைமை என்ன? என்ற தெளிவற்ற நிலையிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர்.  தமது வாழ்க்கை புத்தளத்தில் நீடிக்கப் போகிறதா அல்லது சோந்த இடங்களில் தொடரப்போகிறதா என்ற நிச்சயமற்ற நிலையில் மன விரக்தியுடன் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் சமூக பொருளாதார விடயங்களை வளப்படுத்துவதை விடுத்து நாளாந்த வாழ்க்கையை மட்டுமே முன்னெடுத்து செல்லக் கூடியதாக உள்ளது.

அத்தோடு அவர்களது பூர்வீக பகுதிகளில் காணி மற்றும் சோத்துக்கள் அழிவடைந்து காணப்படுகின்றன. அதேவேளை  தற்போது வாழுமிடங்கள் நிரந்தரமின்மையால் இங்கு காணி சோத்துக்களை வாங்கி வாழ்க்கையைத் தொடர்வதா என்றவாறான குழப்ப நிலைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

வாழ்விடம் முகாமாக இருந்தாலும் சரி குடியிருப்புகளாக இருப்பினும் சரி அவை தற்காலிகமாகவே உள்ளன. மட்டுமன்றி தொழிலைத் தேடிக் கொள்வதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதுள்ளதோடு ஸ்திரமான திட்டங்களையும் வகுக்க முடியாதுள்ளது.

தற்போது வாழும் சூழலில் உறவு நிலைகள் தொடர்பில் அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இதன் போது திருமண விடயங்களை முக்கியமாக சுட்டிக்காட்ட  முடியும்.

இவ்வாறான பிரச்சினைகள் எல்லா அகதிகளுக்கும் காணப்பட்டாலும் தொடர்ந்து 22 வருட காலமாக அகதி வாழ்க்கையை நடத்தி வரும் வடபுல முஸ்லிம்களுக்கு இவை பாரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று வருடங்களாக இந்த மக்களின் நிலை  கடுமையாக மோசமடைந்துள்ளது. அம்மக்களுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்படுள்ளன. ஏனைய பல சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன.  அரசியல் உரிமைகள் மிகவும் மோசமாக உள்ளன. முன்னர் கூட இடம்பெயர்ந்தோருக்கான வாக்களிப்பு நிலையங்கள் இருந்தன. தற்போது இலங்கையில் அகதி முகாம்கள் எதுவும் இல்லை என அரசு கூறியிருக்கின்ற நிலையில் தொடரும் காலங்களில் அரசியல் உரிமைகள் பற்றி  அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் ரீதியாக இம்மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தமது பதிவுகள் சோந்த இடங்களிலா அல்லது தற்காலிக இடங்களிலா என்று தீர்மானிக்க முடியாதுள்ளது. இவாறான பிரச்சினைகளாலும் மன ரீதியாக பாரிய அளவில் உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதுவே இவர்களின் இன்றைய அவல நிலைமைக்கு முக்கிய காரணமாகவுள்ளது.


No comments:

Post a Comment